• Home |
 • About Us |
 • Site Index  
Wednesday, February 10, 2016
tamilarticle.com
 
Heavenly Steps

Heavenly Steps

திருப்த்தியாக்கி நடத்திடுவார்

Open Door

Open Door

ARE YOU READY?

The Gilgal

The Gilgal

The Heavenly Calling Ministry

 
நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத
ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். I பேதுரு 2:3

Article

 • எரிகோ கோட்டை
 • ஐந்த அப்பமும் இரண்டு மீனும்
 • விழுந்தது விழுந்தது எரிகோ கோட்டை… என்று பாட ஆரம்பித்தான் சாமு.. இதைக்கேட்ட சிபு எப்படி அண்ணா பெரியகோட்டை விழுந்தது என்று கேட்டான். பதில் தெரியாத சாமு எனக்கு பாடல்தான் தெரியும். நாம் ஞாயிறு பள்ளி ஆசிரியரிடம் கேட்போம் வா என்று இருவரும் சென்றார்கள்.
  ஆசிரியை அவனுக்கு விளக்கினார்கள். இஸ்ரவேல் தேசத்து மக்கள் எகிப்து தேசத்தில் அடிமையாக இருந்தார்கள்;. தேவன் அங்கிருந்து அவர்களுக்கு விடுதலை கொடுத்து கானான் என்ற பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசத்திற்கு கொண்டுவந்தார்.
  கானான் தேசத்திற்கு வரும் வழியில் இந்த எரிகோ கோட்டை இருந்தது. இதை தாண்டி அவர்களால் போககூடாமலிருந்தது. உடனே இயேசப்பாவிடம் ஜெபித்தாங்க.
  இயெசப்பா அவர்களுக்கு, நீங்கள் ஆறுநாள் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவாருங்கள். ஆசாரியர்கள் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும். ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்து ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும். ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்க வேண்டும். அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும் என்று ஒரு வேலையை கொடுத்தார்.
  இஸ்ரவேல் மக்கள் அப்படியே செய்தார்கள். எரிகோ கோட்டை இடிந்துவிழுந்தது. இப்பொழுது புரிந்ததா? என்றார் ஆசிரியை.
  தம்பி தங்கச்சி நீயும் தேவனுக்கு கீழ்படிந்து விசுவசிப்பாயானால், உன்னுடைய ஆசீர்வாதத்திற்கு பிசாசு கொண்டுவரும் சகல தடைகளாகிய எரிகோ கோட்டைகளை அவர் உடைத்துப்போடுவார்.

   

 • இயேசப்பாவை நம்பியிருக்கிற ஒவ்வொருவரையும் நம்முடைய தேவன் ஒரு குறைவில்லாமல் நம்மை திருப்தியாக்கி நடத்துவார்.
  ஒரு நாள் இயேசப்பா திரளான ஜனங்களுக்கு ஒரு வனாந்திரத்தில்  பிரசங்கம் பண்ணிக்கொண்டே இருந்தார். நேரம் கடந்த படியினால் அவர்களுக்கு ஆகாரம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.
  இயேசப்பா சீஷர்களிடம் ஏதாவது சாப்பாடு கொடுங்கள் என்றார். அவர்களோ இவ்வளவு மக்களுக்கு எப்படி கொடுக்க முடியும்? இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே! என்றார்கள்.
  அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனாகிய அந்திரேயா அவரை நோக்கி: இங்கே ஒரு பையன் இருக்கிறான். அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு. ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்.
  ஆமா மனிதரின் பார்வையில் இத்தனை ஜனங்களுக்கும் சாப்பாடு கொடுப்பது கடினம்தான். ஆகவேதான் சீஷர்கள் நம்மிடத்தில் இவர்களுக்கு போதுமான அளவு இல்லை என்பதை உணர்ந்தார்கள். ஆனால் தேவனால் எல்லாம் கூடும்.
  சிறுபையனிடம் இருந்ததை இயேசப்பாவிடம் கொடுத்தார்கள். அவர் அதை ஆசீர்வதித்து பலருக்கு பயனுள்ளதாக மாற்றினார். தம்பி தங்கச்சி உன் கிட்ட என்ன இருக்கிறது? உனக்கே அது போதாதாக இருக்கலாம். ஆனால் அவைகளை இயேசப்பாவிடம் கொடுப்பாயா! உன்னையும் மற்றவர்களையும் திருப்தியாக்குவார்.
   
   
  மனப்பாட வசனம்: சங்-34:10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

   

 
Missionary Biography

More..   

Family
 • Spiritual Family

  நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம். யோசு - 24:19

 • Biblical Marriage

  புருஷன் தன் மனைவியோடே இசைந்திருப்பான் அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதி - 2:24

 • Biblical Wife

  கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். நீதி-31:30

More..   

 


 
 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்ததில் வாழ்த்துக்கள்!

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருடைய பிள்ளையாய் உழைக்க, பிழைக்க எங்களுடைய வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறோம். தேவ தரிசனத்தோடு இப்படிப்பட்டக் காரியங்களை; ஆவியானவர் எங்கள் உள்ளத்தில் போட்டதையும். கால காலமாய் எங்களை உருவாக்கும் பொழுது கற்றுக் கொண்டப் பாடங்களையும் தாய் மொழியாம் தமிழில் உங்களோடு பகிர்ந்து கொள்ள கர்த்தர் கொடுத்த நல்ல கிருபைகளை நினைத்து ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறோம். எங்களுடையப் பெயர்கள் அல்ல கர்த்தருடைய நாமம் மட்டுமே மகிமையடைவதாக! ஆமென்.

Contact Us

உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.

 • tamilarticle@gmail.com
 • tamilarticleadmin@gmail.com
 • info@tamilarticle.com

கர்த்தரே தேவன்!
Holy Bible நாங்கள் தேவன் ஒருவர் என்பதையும் அவர் - பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்று மூன்று ஆள்தத்துவத்தில் வெளிப்படுகிறார் என்பதையும் விசுவாசிக்கிறோம்.

பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு இவைகள் தேவனால் அருளப்பட்ட கர்த்தருடைய வார்த்தை என்பதை முழு மனதாய் விசுவாசிக்கிறோம்.

இதிலுள்ள ஒவ்வொருப் பகுதியும் முற்றிலும் இலவசம்!
Policy இதிலுள்ள எந்த ஒரு பகுதியிலும் மாற்றுதல் செய்வதும், இதிலிருந்து எடுத்து வேறுப் பெயர்களைப் போட்டு பிரசுரிக்கவும் மாட்டீர்கள் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்; இந்த இணையதளத்தில் (Website) கேள்விகளோ? சந்தேகங்களோ? இருக்குமானால் எங்களோடுத் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இதை அறிமுகப்படுத்த உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

TellaFriend SocialTwist Tell-a-Friend