நெகேமியா

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
ஆண்டவராகிய இயேசு கிறி;ஸ்துவை தங்களுடைய வாழ்க்கையில் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரையும் கர்த்தர் ஒரு தலைவராக உருவாக்கி கொண்டு வருகிறார் என்பதை மறந்து போகக்கூடாது.
இங்கே ஆவிக்குரிய தலைவரின் பாரத்தையும் அவருக்கு வரும் பிரச்சனைகளும் அதில் அவர் எப்படி மேற்கொள்கிறார் என்று நெகேமியா புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்.
புதிதாக ஆண்டவரை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டவர்களுக்கும் இந்தப் புத்தகம் பயனுள்ளதாக அமையும்.
இதை வாசிக்கும் பொழுது அருகில் எழுதப்பட்டுள்ள வசனங்களோடு படிக்க வேண்டுகிறேன்
ஆவிக்குரிய தலைன் எப்பொழுதுமே உடைக்கிறவன் அல்ல மாறாக கட்டுகிறவன்.
அவனுடைய செயலும் சொல்லும் இணக்கம் உண்டு

எழும்பி பிரகாசிக்கும் ஆவிக்குரிய தலைவன்
1. ஒரு தலைவனின் பாரம்
சூசான் என்னும் அரமனையில் அர்தசஷ்டாவின் சக்கரவர்த்திக்கு நெகேமியா பானபாத்திரக்காரனாக வேலைப்பார்த்துக்கொண்டிருந்தான். அவனை இஸ்ரவேலிலிருந்து விசாரிக்க வந்த அனனியாவிடம் தன் ஜனங்களின் சுக செய்திகளை கேட்கும்போது, அதற்கு அனனியா: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.நெகே 1:3
இந்த வார்த்தைகளை கேட்ட நெகேமியா உள்ளம் உடைந்தது. எப்படியாவது இடிந்த அலங்கத்தை கட்ட வேண்டும் என்ற பாரம் அவனை நெருக்கி ஏவினது.
நம்முடைய ஆவி ஆத்மா சரிரம் ஆகிய அலங்கம் எப்படி காணப்படுகிறது?
இன்று ஓரு வேளை நானும் நீங்களும் அலங்கங்கள் உடைந்து கிடக்கிற நம்முடைய குடும்பங்களைக் குறித்ததான பாரம் உண்டா?
உடைந்து கிடக்கும் சபையைக் குறித்து பாரம் உண்டா? இந்த சபை உடைந்து கிடக்கிறது, ஆகவே வேறு சபைக்கு போகிறேன் என்று சொல்லி காரியங்களை இலகுவாக எடுத்துக்கொள்ளுகிறீர்களா? ஆவிக்குரிய தலைவனே எழும்பி கட்டுவதற்கு உன்னை ஏன் அர்ப்பணிக்க கூடாது! எழும்பி பிரவேசிக்கவே ஆவியானவர் உனக்குள்ளே வந்திருக்கிறார்.

2. ஒரு தலைவனுடைய ஜெபம்
ஜெபிக்காத ஒரு ஆவிக்குரிய தலைவன் சத்துவமற்றவன். பாருங்கள் உடைக்கப்பட்ட அலங்கத்தை பார்த்தபொழுது
1. இருதயம் நொருக்கப்பட்டு தேவனுடைய சமூகத்தில் உபவாசம் இருந்து கர்த்தரின் சமூகத்தில் மன்றாடுகிறான்.
2. தானும் தன்னுடைய ஜனங்கள் செய்த எல்லாவித அக்கிரமங்களையும் பாவங்களையும் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்டு தன்னை தாழ்த்துகிறான்.
3. கர்த்தர் கொடுத்த வாக்குதத்தங்களை உரிமையாக்கி ஜெபிக்கிற     ஜெபம்.
ஒரு ஆவிக்குரிய தலைவனின் ஜெபம் இப்படி இருக்குமானால் கர்த்தர் ஒரு அசைவை நிச்சயம் கொண்டுவருவார்.
இப்படிப்பட்ட பாரத்தையும் அதோடுகூடிய ஜெபத்தையும் கர்த்தர் அங்கீகரித்தார். நெகேமியாவுக்கு ஆண்டவர் அந்த பொறுப்பையும் கட்டளையிட்டார். அவன் அந்த பொறுப்பை எடுத்து கையாளும் போது வந்த ஒவ்வொரு பிரச்சினைகளையும் மாமிச பிரகாரமாக இல்லை ஆவியின் பிரகாரமாக எப்படி மேற்கொண்டான் என்று பார்க்கப்போகிறோம்;. நம்முடைய வாழ்க்கையையும் ஒப்பிட்டு நமக்கு வரும் பிரச்சினைகளையும் ஆவிக்குரிய முறையில் கையாளும் படியாக உங்களை கேட்கிறேன்.
மனதளவின் தாக்கங்கள்
நெகேமியா அலங்கத்தை கட்ட ஆரம்பித்ததும் சத்துருக்களால் வந்த எல்லா கேலிக்கூத்துகளையும் பொருட்படுத்தாதபடி அலங்கத்தை கட்டுவதில் ஆவலாக இருந்தான்.
முதலாவது ஆவிக்குரிய தலைவர்களின் எண்ணங்களை நிவர்த்தி செய்யாதபடிக்கு அல்லது அவர்களின் அற்பமான ஆரம்பங்களை முட்டுக்கட்டை போடுவதற்கு சத்துருவின் தாக்கங்கள் மனதளவில் உருவாகி நம்மை சோர்வடைய செய்ய முயற்சிக்கும்.
ஆவிக்குரிய தலைவர்களோ இவைகளை கண்டு சோர்ந்து போகாதபடி உன்னத அழைப்பை மாத்திரம் மனதில் வைத்து நகருவோமானால் காரியங்களை வாய்க்கப்பண்ணமுடியும்.
பொதுவாக ஒருவன் உலகத்திலிருந்து பிரிந்து கர்த்தருக்கு சொந்தமாகும் பொழுது அநேக விதமாக கேலிகூத்துக்கு ஆளாகுவோம் இவைகளைக்குறித்து கலங்காமல் இன்னும் சந்தோஷமாக உங்கள் மனம் மறுரூபமாகி அதை ஏற்றுக்கொள்ளும் பொழுது ஆவிக்குரிய வாழ்க்கை கட்டப்படும். பிறரால் வரும் மன உளைச்சல்களை சந்தோஷமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
உடலளவில் தாக்கங்கள்
எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டு வருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அதை முறியடிக்க யுத்தம் பண்ண வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். ஆனால் ஆவிக்குரிய தலைவனான நெகேமியாவோ தங்கள் முட்டுகளை மடக்கி விண்ணப்பித்து அந்த திட்டங்களை முறியடித்தான்.
எப்படியாவது தேவன் வைத்திருக்கிற உன்னதமான திட்டங்களை நம்முடைய வாழக்கையிலிருந்து சத்துரு எடுத்துப்போடவேண்டும் என்று முயற்சிக்கிறான்.
மனதளவின் தாக்கங்களை வெற்றிக்கொள்ளும்பொழுது அல்லது நம்முடைய உடைக்கப்பட்ட அலங்கம் கட்டப்படும்பொழுது சில தாக்கங்களை நேரடியாக கொண்டுவருவான். அதாவது வேலையிழப்பு, வியாதிகள், எதிர்ப்புகள் இன்னும் அநேகம்.
நம்மை தாக்க வேண்டும், யுத்தம் செய்து நம்மை செயலிழக்கப்பண்ண வேண்டும் என்று நம்மை சுற்றி நெருங்கி நிற்கும்பொழுது, ஆவிக்குரிய தலைவர்கள் மாமிசத்தோடு போராட முயற்சி பண்ணக்கூடாது. ஏனென்றால் நம்முடைய யுத்தம் மாமிசத்தோடும் இரத்தத்தோடும் இல்லை. ஆனால் பொல்லாத ஆவியோடு உண்டு.
இப்படிப்பட்ட போராட்டம் வரும்பொழுது நெகேமியா ஜனங்களோடு சேர்ந்து ஜெபித்த பொழுது, சத்துருவின் எண்ணங்கள் அபத்தமாக்கப்பட்டது
;அதோடு அவன் நிறுத்திவிடவில்லை. இப்படிப்பட்ட தாக்குதல் எப்பொழுதும் வரலாம். ஆகவே நெகேமியா தன் ஜனங்களை சர்வாயுத வர்க்கங்களை அணிந்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினான்.
ஆகவே ஆவிக்குரிய தலைவர்கள் சர்வாயுத வர்க்கத்தை தரித்து அரண்களை நிர்மூலமாக்க பயிற்சி செய்து பழகிக்கொள்ள வேண்டும். பட்டயமாகிய பரிசுத்த வேதாகமத்தை எப்பொழுதும் பயன்படுத்தவும் பண்படுத்தவும் கீழ்படியவும் வேண்டும்.
இப்படிதான் அலங்கம் கட்டப்பட்டது. இன்று நம்முடைய அலங்கம் கட்டப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டுள்ளதா?
தாக்கங்களில் சோர்ந்து தரிசனங்களை முடிக்கமுடியாமல் பின்வாங்கியிருக்கிறீர்களா?
ஆவிக்குரிய தலைவர்கள் போராட்டங்களை சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். பவுல் தீமோத்தேயுக்கு எழுதும்பொழுது நீயும் நல்ல போர்ச்சேவகனாக தீங்கனுபவி. என்று எழுதுகிறார்.
பொறித்தாக்குதல்
நெகேமியா அலங்கத்தை கட்டி முடித்துவிட்டான். ஆனால் இன்னும் கதவு போடவில்லை. இதை அறிந்த சத்துருவின் கூட்டம் எத்தனையோ ஆயுதங்களை பயன்படுத்தியும் இவர்கள் விழவில்லை. ஆகவே வித்தியாசமான கண்ணி மூலம் இவர்களை விழவைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.
வேடன் ஒரு புறாவை பிடிக்க வேண்டுமானால், அந்த புறா ஆசைப்படுகிற ஒரு பொருளை போடுவான். அந்த புறாவும் அதின் மேல் ஆசைக்கொண்டு இணங்கும்பொழுது தான் அறியாமல் வைக்கப்பட்ட வலைக்குள் மாட்டி விடுவதுபோல, ஆவிக்குரிய தலைவர்களையும் இப்படிப்பட்ட காரியங்களை காட்டி விழ வைப்பது சத்தருவின் வேலை. ஆகவே ஆவிக்குரிய தலைவர்களே நீங்கள் ஆவியினால் நடத்தப்பட்டாலொழிய வெற்றிபெறுவது கடினம்.
சில கண்ணிகளை நெகேமியாவின் புத்தகத்திலிருந்து நான் உங்களுக்கு வெளிக்காட்ட விரும்புகிறேன்.
1. ஒத்துப்போகப்பண்ணுதல்
ஓனோ பள்ளத்தாக்கிலே ஒருவரை ஒருவர் கண்டு பேசுவோம் அல்லது சமரசம் ஆகுவோம் வாரும் என்று நெகேமியாவை அழைத்தனர். அவனோ அவனுடைய அழைப்பை அறிந்திருந்தான். ஆகவே அவன் அந்த காரியத்தில் ஒத்துப்போகவில்லை. ஆகவேதான் அந்த பணி தொடர்ந்து செய்ய முடிந்தது.
ஆவிக்குரிய தலைவர்கள் தன்னுடைய தரிசனத்தை நிறைவாக்க தேவன் அழைத்த உயர்ந்த அழைப்பை (ர்பைh ஊயடடiபெ) மறந்து உலகத்தாரை நம்பி அவருடைய காரியங்களுக்கு ஒத்துபோகிறது ஒரு கண்ணி.
உதாரணமாக,  நம்முடைய சபைக்கோ அல்லது சங்கத்திற்கோ தேவையான ஒரு கையெழுத்து வட்டாட்சி அலுவலரிடம் வாங்க வேண்டும் என்றால் நமக்கு தெரிந்த ஒருவரை பயன்படுத்தி (ஐகெடரநnஉந) வாங்குவோமானால் அது தவறு.
மாறாக, தேவனை மாத்திரம் சார்ந்து அழைப்பிலே உறுதியாக நின்று காரியங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
2 பயம்
சத்துருக்களிடமிருந்து அநேக பயமுறுத்தல்கள் வந்தன. இவைகளெல்லாம் தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, கைகளை திடப்படுத்தி மேற்கொண்டார்கள்.
தலைவர்களே! நாம் செய்த ஏதாவது பிழைகளை நமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தி நம்முடைய உள்ளத்தில் ஒரு பெரிய பயத்தை போட்டு தேவனுடைய சமூகத்தை விட்டு ஓடிபோகப்பண்ணுவான். வேதம் சொல்லுகிறது மனுஷனுக்கு பயப்படுகிற பயம் கண்ணியை வருவிக்கும்.
ஆனால் தேவன் நம்மை எதற்காக அழைத்தாரோ அதை நிறைவேற்றுவதற்காக நம்மை நடத்தி செல்லுகிறார். ஆண்டவரிடத்தில் நம்முடைய பிழைகளை அறிக்கை செய்து அதை விட்டுவிடும்பொழுது கர்த்தர் நம்மை மன்னித்து விடுகிறார்.
ஆவிக்குரிய தலைவன் எதைக் குறித்தும் அஞ்சாதபடி தேவனால் புதிய பெலத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கோலியாத் என்னும் மலையைப் பற்றி தாவீது பயப்படவில்லை. மாறாக, அந்த பெரிய உருவத்தின் மேல் இலகுவாக கல் படும் என்ற மேலான எண்ணம் அவனை ஜெயிக்க வைத்தது.
3. ஒளியின் வேஷம்
சத்துரு செய்த அடுத்த திட்டம் இஸ்ரவேலுக்குள் ஒருவனை எழுப்பி கள்ளத்தீர்க்கதரிசனம் உரைக்க வைத்தான். ஆனால் நெகேமியாவோ அதை இலகுவாக புரிந்து கொண்டான். காரணம் என்ன? என்றால் அவன் தேவனோடு நடக்கிற ஒருவன், அதோடு தேவனுடைய வார்த்தைகளை அறிந்திருந்தான்.
ஆவிக்குரிய தலைவர்களே நீங்கள் கள்ள தீர்க்க தரிசனத்தினாலோ, ஒளியின் துhதனுடைய வார்த்தையினாலோ அல்லது கள்ள உபதேசத்தினாலோ வஞ்சிக்கப்படாமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்.
நெகேமியாவுக்கு வந்த கள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளை அவன் புரிந்துகொண்டான். நியாயப்பிரமாணம் சொல்லுகிறது தேவாலயத்திற்குள் ஆசாரியர் ஒருவரை தவிர வேறு யாரும் போகக்கூடாது. வேதம் நமக்கு துhரமாக இருக்குமானால் வஞ்சிக்கப்பட்டு போவோம். ஆகவே ஒவ்வொரு ஆவிக்குரிய தலைவனும் தேவனுடைய உதவியோடு வேதத்தை படிக்கவேண்டும்.
ஆவிகளை பகுத்தறிகிற வரத்தை பெற்றுக்கொள்வோமானால் எந்த உத்வேகத்தோடு அந்த வாக்கை சொல்லுகிறார்கள் என்பதை கண்டுகொள்வதற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.
அந்தரங்க தாக்குதல்
1. ஆவிக்குரிய விபச்சாரம்
அலங்கம் முழுவதும் கட்டி முடித்து கதவுகளும் போட்ட பிற்பாடு சத்துரு இன்னொரு தாக்குதலை ஆரம்பித்தான்.
அங்கு உள்ள ஆசாரியர்களும் மூப்பர்களோடு தனிப்பட்ட முறையில் அல்லது அந்தரங்க தொடர்பு ஏற்படுத்தி கடித போக்கு வரத்தும் இன்னும் உறவுகளில் ஐக்கியத்தை ஏற்படுத்தி கொண்டனர்.
அதாவது ஆவிக்குரிய தலைவன் நல்ல ஒரு வெளிப்புற தோற்றம் வந்த பிற்பாடு அவனுடைய உள்ளான வாழ்க்கை மிக முக்கியம். ஒரு வேளை நம்மை பார்க்கிறவர்களின் கண்களை மறைத்து விடலாம். ஆனாலும் அந்தரங்க வாழ்க்கையில் நம்முடைய வாழ்க்கை எப்படியுள்ளது? தேவையில்லாத ஆட்களோடு கடித போக்குவரத்து வைத்திருக்கிறோமா? அப்படியென்றால், தேவையில்லாத உhயவவiபெஇ நஅயடை உழவெயஉவiபெ இவை ஒரு ஆவிக்குரிய தலைவனை சீரழித்துவிடும்.
தேவன் தங்குகிற நம் ஆலயமாகிய பலி பீடத்தில் யார் தங்கும்படியாக அறைகளை கட்டிகொடுத்திருக்கிறீர்கள். ஒரு வேளை தேவன் தங்கும் ஆலயமாகிய நம்முடைய இருதயத்தில் தேவனைத்தவிர வேறொருவருக்கு ஒரு அறை இருக்குமானால் அதை மாற்றி விடுங்கள்.
2. ஆவிக்குரிய வியாபாரம்
ஓரு ஆவிக்குரிய தலைவன் வியாபார நோக்கத்தோடு எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது. மாறாக, தேவனுக்கு மகிமை செலுத்துகிறவனாகவே காணப்படவேண்டும்.
இயேசுக்கு சேவை செய்யும் அநேகர் இன்று இப்படிப்பட்ட வியாபார நோக்கத்தோடு செயல்பட்டு தேவனுடைய அழைப்புக்கு அப்பால் செல்லுகிறார்கள். அருமையான ஆவிக்குரிய தலைவனே! உன்னுடைய முழு ஆவிக்குரிய வாழ்க்கையும் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் அந்தரங்க வாழ்க்கையில் ஏதாவது பண ஆசையோடும், வியாபார சிந்தையோடும் காணப்படுகிறோமா?
அப்படிப்பட்ட மனப்பான்மை நம் இருதயத்தில் குடியிருக்குமானால் அதை விரட்டி அடியுங்கள். ஒரு ஆவிக்குரிய தலைவனுக்கு பணமும் பொருளும் ஒரு பொருட்டல்ல. தேவ கிருபை போதுமானது.
3. ஆவிக்குரியவர்களின் மாமிச இச்சை
இன்று அநேக ஆவிக்குரிய தலைவர்கள் பேலியாளுடன் இசைவு வைத்திருப்பதினால் தேவனோடு கூட நடக்க முடியவில்லை. உங்களுடைய திருமண வாழ்க்கையிலே தேவனுக்கு பிரியமானதை செய்கிறீர்களா? இச்சையோடு பார்ப்பதே விபச்சாரம் என்று சொல்லும் வேத வார்த்தைகளை மீறி தன்னுடைய இருதயங்களில் இன்னொருவரோடே தேவையில்லாத தொடர்பு வைத்திருக்கிறவர்களிடத்தில் எப்படி தேவ திட்டம் நிறைவேற முடியும்.
ஆவிக்குரிய தலைவர்களே, அலங்கம் முழுவதும் கட்டப்பட்டாலும் உங்கள் அந்தரங்க ஜீவியத்தில் அதாவது உங்களுடைய உள்ளான எண்ணங்கள் கிறிஸ்துவுக்காக மாறவேண்டும். அப்பொழுதுதான் ஒரு ஆவிக்குரிய தலைவனாகவும் உடைக்கப்பட்ட இடங்களை கட்டுகிறவனாகவும் தேவன் நம்மை பயன்படுத்த முடியும்
4. ஆவிக்குரியவர்களின் ஜீவனத்தின் பெருமை
இன்று அநேக ஆவிக்குரிய தலைவர்கள் விழுந்து விடுவதற்கு காரணம் பெருமை தான். ஏதாவது ஒரு காரியங்களை ஆவிக்குரிய தலைவன் மூலமாக தேவன் செய்து விட்டால், தேவனுடைய கிருபையை மறந்து தன்னுடைய கிரியையை மேன்மைபாராட்டி அதை வீடியோக்களில் மாற்றி தங்களை தேவன் பயன்படுத்துகிறார் என்று பறைசாற்றுகிறார்கள். யோவானைக்குறித்து இயேசு சாட்சி சொல்லும் போது அவன் எரிந்து பிராகாசிக்கிற விளக்காக இருந்தான் என்றார். இன்று நாம் எப்படியோ?
அப்போஸ்தலர் அனைவருடைய மரணமும் நமக்கு முன்பாக மாதிரியாக வைக்கப்பட்டுள்ளது.
நெகேமியா ஒரு இடத்தில்கூட பெருமைபடாதபடிக்கு தேவனுடைய கிருபைக்கு மாத்திரம் காத்திருக்கிறான்.
உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக 13: 22
தாழ்மையுள்ளவனுக்குதான் கர்த்தர் கிருபை கொடுக்கிறார். ஒரு வேளை நமக்கு பெருமையிருக்குமானால், தேவன் நமக்கு எதிர்த்து நிற்கிறார்.
ஒரு நெகேமியாவைப்போல நாமும் ஒரு ஆவிக்குரிய தலைவனாக மாறுவோமா! நமக்கு வரும் பிரச்சனைகளிலிருந்து தப்புவதற்கு தேவ ஞானத்தை பெற்றுக்கொள்வோமா!
இடிந்து கிடக்கிற இடங்களில் கட்டுகிறவர்களாய் மாறுவோமா!
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் மாத்திரமே மகிமைப்படுவதாக. ஆமென்!

Add Comment