அதில் எழுதினது போல

எனக்கு விவரம்  தெரியும் பொழுது ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள Pager  பயன்படுத்துவார்கள். அதைக் குறித்தே அதிகமாக யோசித்துக் கொண்டு இருப்பேன். நான் வாலிப வயதான போது சிலருடைய கையில் மொபைல் போண் இருந்ததை பார்த்தேன். அதை நாமும் வாங்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் என் மனதில் அதிகமாக இருந்தது. ஆனாலும் பணம் என்கிற முதல் அன்று இல்லாததினால் ஆசையை அடக்கி சமாளித்துவிட்டேன்.
படித்து பட்டம் வாங்கி பணியில் அமர்ந்ததும் அந்த கனவை நிறைவேற்ற போண் வாங்க சென்றேன். அன்று Nokia 3310 என்ற மொபைல் தான் பயங்கர டிமாண்ட். அன்று அதன் விலை ரூ5000. இருப்பினும் அதை வாங்கி மகிழ்ச்சியோடு சென்றேன்.
அப்புறம் சொல்லவா வேண்டும்? எப்பொழுதும் மொபைலும் கையும் தான். ஏதாவது அதின் உள்ளே சென்று செய்து கொண்டே இருப்பேன். ஒருவேளை வாயிருந்தால் அது அழுதிருக்குமோ! தெரியாது.
ஏதேதோ செய்து கடைசியாக மொபைல் போணின் மொழியை மாற்றி பார்ப்போமே என்று தமாஸாக Arabic ல் மாற்றி விட்டேன். பிற்பாடு எந்த ஒரு எண்ணை அழுத்தினாலும் அது அரபிக்கில் வந்ததால் கொஞ்சம் குழம்பி ஒன்றும் புரியவில்லை. மீண்டும் ஆங்கிலத்திற்கு கொண்டுவர எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தேன்.
;ம்ம்… சரியாக வர வில்லை. அன்று மொபைல் போண் என்பது யாராவது ஒருவர் கையில் தான் பார்க்க முடியும். அப்படி இருந்தாலும் அவர்கள் Ericson கம்பெனி போண் தான்; வைத்திருந்தார்கள். ஆகவே அன்று எனக்கு அறிந்த தெரிந்த நண்பர்களிடமும் விசாரித்தேன். வழி தெரியவில்லை.
கடைசியாக ஒரு ஐடியா வந்;தது. அந்த மொபைல் வாங்கும் பொழுதே அதனோடு ஒரு புத்தகமும் (Manuel) தந்தார்கள். ஆங்கிலத்தில் இருந்த அந்த புத்தகத்தை எடுத்து வாசித்து பார்க்கும்பொழுது, அதில் மொழியை எப்படி மாற்ற வேண்டும் என்று தெளிவாக இருந்தது. அதில் எழுதினது போல் எண்களை அழுத்த ஆரம்பித்தேன். அப்பப்பா…
பழைய நிலைக்கு வந்தது என்னுடைய போண்.
அருமையானவர்களே அந்த மொபைல் போணை உருவாக்கிய Nokia கம்பெனி அதோடு கூட அதை பராமரிப்பதற்கும், அதை சரியான முறையில் கையாளுவதற்கும் எல்லாரும் புரிந்து கொள்ளும் படியாக அந்த புத்தகத்தையும் அதன் கூடவே தருகிறார்கள் அப்படிதானே.
அதை போல தான் மனிதர்களாகிய நம்மை உருவாக்கின தேவன் இந்த உலகத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்றும், வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதை எப்படி கையாள வேண்டும் என்றும், ஒரு மனிதன் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் போது நம்பிக்கையை ஊட்டியும், தோல்வியில் இருக்கும் மனிதர்களை  தட்டி எழுப்பவும், தற்கொலைக்கு அருகிலிருக்கிறவர்களுக்கு மறுபடியும் ஜீவனை அளிப்பதற்கும் தேவன் நமக்கு பரிசுத்த வேதாகமத்தை நம்முடைய கையில் தந்திருக்கிறார்.
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும்….,
கேட்கிறவர்களும்…….
இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும்…
பாக்கியவான்கள் (வெளி 1:3)
சங்-19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

சங்-119:105 (நான்.)உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

உங்களுடைய வாழ்க்கையின் குழப்பங்களை சமாதானமாக மாற்ற பரிசுத்த வேதாகமத்தை படியுங்கள்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.

 

3 Comments

  1. Suresh May 9, 2016
  2. Suresh May 9, 2016
    • admin May 10, 2016

Add Comment