அற்புதத்தை நோக்கி

பொதுவாக நான், பார்க்கிற ஒவ்வொருவருடனும் இயேசு அற்புதம் செய்வார் என்பதை சொல்வேன்…
அதில் சிலர், அதை ருசிபர்ப்பதை நான் பார்த்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தியிருக்கிறேன்…
எப்படி தேவன் செய்யும் அற்புதத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை உதாரண கதையோடு எடுத்து எழுத விரும்புகிறேன்..
எங்கள் வீட்டில் எப்பொழுதும் மீன் இருக்கும்.. ஓவ்வொரு வாரமும் மீன் சந்தைக்கு போய் மீன் வாங்குவது வழக்கம்.. அந்த மாதம் திடீரென கொஞ்சம் பணக்கஷ்டம் வந்த படியினால் மீன் வாங்க பணமில்லாமல் இருந்தது….
இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இந்த உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் உண்டாகும் என்பதில் ஐயமில்லை. யாரும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு விதி விலக்கும் அல்ல…
நாம் பொதுவாக இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நம்முடைய முயற்சிகள் எல்லாம்…..
முதலாது credit card   இருக்குமானால் அதை தடையில்லாமல் பயன்படுத்துவோம்..
கடையிலே நமக்கு ஒருவேளை கடன் கிடைக்குமானால் அதை பயன்படுத்தவும் வெட்கப்பட மாட்டேம்…
அல்லது யாருடைய உதவியாவது தேடுவோம்…
இவைகள் தான் நாம் கையாளுகிற பொதுவான நியதி
தேவனுடைய பார்வையில்….
என் பிள்ளைகள் இந்த சூழ்நிலைகளில் என்னிடத்தில் வர மாட்டார்களா என்ற ஏக்கம்.. அதோடு நம்முடைய விசுவாசம் எங்கேயிருக்கிறது என்பதை பரிட்சை பார்க்க இது அவருக்கு சரியான நேரம்…
மீன் வாங்க பணம் இல்லாத சூழ்நிலையில் நானும் பொதுவான நியதியின் வழியாக பிரவேசிக்காமல் அவர் அற்புதம் செய்கிறார் என்று பிரசங்கிக்கிற நான் அவரை மாத்திரம் சார்ந்திருக்கலானேன்..
மனதிற்குள் பணம் இல்லாத சூழ்நிலைகள் ஓடிக்கொண்டிருந்தாலும்… யாரிடமும் அதை வெளிக்காட்டாமல் புன் சிரித்து உள்ளத்தில் தேவனை நோக்கி பார்த்தேன்… அவருடைய சர்வ வல்லமையை எண்ணிப் பார்த்தேன்.. அவரால் முடியும் என்ற விசுவாச கண்ணால் பார்க்கலானேன்…
ம்ம்.. அன்று ஆலயத்திற்கு சென்று தேவனை ஆராதித்து விட்டு திரும்பி எங்களுடைய வாகனத்தில் வரும்போது… என்னுடைய கைபேசியில் ஒரு சகோதரன் பேச… அவரோடு…
ஐயா தாங்கள் ஏன் இன்று ஆராதனைக்கு வரவில்லை என்று நான் கேட்க,…
அவர் சொன்னார், அலுவலகத்திலிருந்து திடீரென கடல் பயணத்திற்கு கட்டாய அழைப்பு விடுத்தார்கள்… ஆகவே நான் அங்கு சென்று விட்டேன்… கொஞ்சம் மீன் கிடைத்தது. தாங்கள் வந்து அதை பெற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டார்..
என்னே ஆச்சர்யம்…
இன்றும் என் இயேசுவின் வல்லமைகள் குறைந்து போக வில்லையே.. அவரை சார்ந்திருப்போருக்கு…
பொதுவாக உங்கள் பொது நியதியை பயன்படுத்தினால் வேதனைகள் தான் மிச்சம்… யோசிப்போம்
credit card  நம்பியிருப்போமாயின் இயேசு ஒரு நாளும் அற்புதம் செய்யமாட்டார்…

தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது; 2நாளா-16:9

கர்த்தர் இன்றும் அற்புதம் செய்கிறார் ஆமென்…

Add Comment