அவமானத்தை எண்ணாமல்

நல்ல பெயரும் புகழுடன் வாழ்ந்த தயாபரன் தன்னுடைய வாழ்க்கையை எளிமையாக அநேகர் வியக்கத்தக்க வகையில் வாழ்ந்து வந்தார். அப்படியே ஆவிக்குரிய வாழ்க்கையிலும்… தேவனுக்கு பிரியமான ஒரு மனுஷன்..
தேவன் அவனை, அவனுடைய பட்டணத்தில்; கனப்படுத்தி வைத்திருந்தபடியினால், அவருடைய பட்டணத்தில்; ஏதாவது பிரச்சனையோடு உள்ளவர்கள் இவனிடமே ஆலோசனை பெறுவதற்கும் ஜெபிப்பதற்கும் வருவார்கள்.
சிலர் உம்மைப்போல மாற வேண்டும் நாதா… என்று சில நேரங்களில் சும்மா பாடிக் கொண்டிருப்பார்கள்..
ஆனால் இந்த வாலிபனுக்கு உண்மையாகவே இயேசுவைப் போல மாற வேண்டும் என்ற எண்ணம் ..
ஜெபநேரங்களில் மண்டியிட்டு நாதனிடம் அதை தான் கேட்பான். எப்படியாவது அவரைப்போல மாறவேண்டும்…
ஒரு நாள் இப்படிதான் ஜெபித்துவிட்டு வெளியே வந்தான். அப்பொழுது வீட்டு வாசலில் ஒரு பெண் கையில் ஒரு பச்சிளம் குழந்தையுடன் உரத்த சத்தத்தில் ஊரே கேட்கும் வண்ணம்… இது உன்னுடைய பிள்ளை…, இது உன்னுடைய பிள்ளை… என்று பலவிதமான வசை சொல்லோடு, நீயே இதை வைத்துக்கொள் என்று கத்த,
ஊரார் கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது… இவர் ஏதோ சொல்ல முயல.. பேசவிடாமல் குழந்தையை கையில் கொடுத்து விட்டு அந்த பெண் அதிலிருந்து நழுவ ஆரம்பித்தார்;.
அவ்வளவு தான் குழந்தை அன்னாரின் கையில்… பட்டணத்தார் அவரை வித்தியாசமாக பார்க்க…. ஒன்றும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. வீட்டிற்குள் சென்று கதவை அடைத்து அந்த குழந்தையை கையில் எடுத்து தேவனை நோக்கி பார்க்கலாயினார்… இது என்ன ஆண்டவரே… ஐயோ! இத்தனை நாட்கள் சம்பாத்தியம் செய்த பெயர், மானம் கெட்டுப்போனதே… இனி எப்படி இந்த ஜனங்களை சந்திப்பேன்… நான் எப்படி என்னை நீதிமான் என்று நிரூபிக்க முடியும்… முழங்கால் போட முடியாமல் அப்படியே கீழே உட்கார்ந்து தேவனை நோக்கி அண்ணாந்து பார்த்த போது கண்ணீர் தாரைதாரையாய்… தரையை நனைத்தது..
அப்பொழுது இயேசு அவரோடு உணர்த்த ஆரம்பித்தார்.. என்னை போல மாறவேண்டும் என்று ஜெபித்தாயே.. என் மகனே! ம்ம் நான் என்னைப்போல் உன்னை மாற்றுகிறேன் என்றார்…
பாவம் செய்யாத நான் (நாம் அவருக்குள் தேவனுடைய நீதி யாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் 2கொரி-5:21)  உங்கள் பாவங்களை சிலுவையில் சுமக்கவில்லையா… மயிர் கத்தரிக்கிற ஆட்டைப்போல அமைதியாக இருக்கவில்லையா! மரணபரியந்தம் என்னை தாழ்த்தவில்லையா!…. அமைதியாயிரு, தாங்கிக்கொள் என்னைபோல் உன்னை மாற்றுவேன்..
ஆ! ஒரு சின்ன பெருமூச்சு… சரி ஆண்டவரே… என்று தேவனுக்கு முன்பதாக சமாதானமாக இருந்தான்…..
பட்டணத்து ஜனங்களைக் குறித்து கவலைப்படவில்லை. தேவன் தன்னோடு இருக்கிற அந்த நம்பிக்கையும் சமாதானமும்.. அவனை உற்சாகப்படுத்தியது. ஆகவே அவன் தன்னுடைய அன்றாட வேலை செய்து இந்த குழந்தையையும் பார்க்கலாயினான்..
அவனுடைய வாழ்வில், எண்ணங்களில், சிந்தைகளில், நடைமுறை வாழ்விலும் இயேசுவைப் போல மாறினான்…
சில நாட்கள் சென்ற பின்பு அதே பெண் திரும்ப வந்தாள். தான் தவறு செய்ததாக அறிவித்து தன் குழந்தையை வாங்கிச் சென்றாள்…
எதை அவர் நாமத்தினிமித்தம் இழந்தானோ அதை பல முறை அதிகமாக திரும்ப பெற்றுக்கொண்டான்..
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். எபி-12:2
போத்திபார் வீட்டில் இழந்துபோனதை யோசேப்புக்கு திரும்ப கொடுத்தார்..
நாமும் இயேசுவைப்போல மாறுவோமா!

 

One Response

  1. admin May 1, 2016

Add Comment